/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோரம் கோழிக்கழிவு- நாய்கள் படையெடுப்பால் அச்சத்தில் பொதுமக்கள்
ரோட்டோரம் கோழிக்கழிவு- நாய்கள் படையெடுப்பால் அச்சத்தில் பொதுமக்கள்
பொங்கலுார்: கொடுவாய் நாச்சிபாளையம் ரோடு ஆண் கோவில் அருகே ரோட்டோரத்தில் சிலர் கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர். அவற்றை சாப்பிடுவதற்காக ஏராளமான நாய்கள் அவ்விடத்தில் கூடுகின்றன. அவற்றை நாய்கள் கடித்து குதறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த இடம் வளைவான பகுதியாகும். அவ்விடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அவ்விடத்தை கடந்து செல்கின்றனர். குறிப்பாக டூவீலர் ஓட்டிகள் நாய்கள் குறுக்கே வருவதால் கீழே விழுந்து அடிபடுவது அடிக்கடி நடக்கிறது. எனவே, ரோட்டோரத்தில் கோழி கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.