பாரம்பரிய விளையாட்டுகளுடன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
அனுப்பர்பாளையம்; திருப்பூர், பூலுவபட்டியிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நேற்று நடந்தது.விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா, தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முஸ்ரக் பேகம், வார்டு கவுன்சிலர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழாவில், 1990ம் ஆண்டுகளில் பயன்படுத்திய மிட்டாய் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.குலை குலையா முந்திரிக்கா, டயர் வண்டி, நுங்கு வண்டி, பம்பரம், பரமபதம், ஐந்தாங்கல், தாயம், ரயில் வண்டி, நொண்டி விளையாட்டு, கயிறு இழுத்தல் ஆகியவற்றை குழந்தைகள் உற்சாகமாக விளையாடினர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.