கோவிலில் சிறுவர் பூங்கா
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் புதிதாக தேர் அமைக்கப்பட்டது. இக்கோவிலில், தேரோட்டம் சமீபத்தில் நடந்தது. தற்போது, கோவில் எதிரேயுள்ள கோவில் நிலத்தில் தேர் நிறுத்தி வைக்க தேர்நிலைத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. திடல் பகுதியில் உள்ள காலியிடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்துள்ளதாக, அறங்காவலர் குழு தலைவர் முருகேசன் தெரிவித்தார்.