உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சித்திரைத் தேர்த்திருவிழா இன்று துவக்கம்; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கோலாகலம்

சித்திரைத் தேர்த்திருவிழா இன்று துவக்கம்; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கோலாகலம்

அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசி, ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர்த்திருவிழா தொடங்குகிறது.இன்று இரவு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சி, நாளை மாலை சூரிய சந்திர மண்டல காட்சி, 3ம் தேதி அதிகார நந்தி கிளி பூதம், அன்னபட்சி வாகனம் மற்றும் புருஷாமிருக வாகன காட்சிகள், 4ம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கின்றன.வரும் 5ம் தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், 6ம் தேதி கற்பக விருட்சம், வெள்ளை யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும்.வரும் 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருளல், 8ம் தேதி காலை பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 9ம் தேதி தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வரும் 10ம் தேதி காலை கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரி வரதராஜ பெருமாள் ஆகிய தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும் 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சி, 13ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், 14ம் தேதி மஞ்சள் நீர், மயில் வாகன காட்சியுடன் திருவிழா நடைபெறும்.பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் மற்றும் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ