உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சித்ரகுப்தர் கோவில் பவுர்ணமி விழா; சிறப்பு பஸ் இயக்க வேண்டுகோள்

சித்ரகுப்தர் கோவில் பவுர்ணமி விழா; சிறப்பு பஸ் இயக்க வேண்டுகோள்

திருப்பூர்; சித்ரா பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, சித்ரகுப்தர் கோவிலுக்கு, வரும் 12ம் தேதி, சிறப்பு பஸ் இயக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலசங்க தலைவர் பொன்னுசாமி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு விவரம்:திருப்பூர் - மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் ஸ்ரீ சித்ரகுப்தர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் நடைபெற உள்ள சித்ராபவுர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். திருப்பூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் சித்ரகுப்தர் கோவிலுக்கு வர உள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லாதது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, திருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து சித்ரகுப்தர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும். அதேபோல், திருப்பூர் - மங்கலம் ரோடு வழியாக, செல்லும், 5, 5ஏ, 14 ஆகிய பஸ்களை, விழா நடைபெறும் 12ம் தேதி மட்டும், காலை முதல் இரவு வரை, சின்னாண்டிபாளையம் பிரிவிலிருந்து கூடுதலாக, ஒரு கி.மீ., துாரம் கோவில் வரை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை