முதிய தம்பதியருக்கு பரிவட்டம்
அனுப்பர்பாளையம் : அனுப்பர்பாளையம் 74 ஆகனத்தார் கன்னார் சமூக நல வாழ்வு சங்கம் சார்பில், 4ம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா; 68 வயது பூர்த்தியான தம்பதிகளுக்கு பரிவட்டம் கட்டும் விழா நடந்தது.அனுப்பர்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சமூக மக்களின் குடும்ப நலன், கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக வேள்வி பூஜை நடந்தது.தம்பதியர் 68 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பெரியோர்களுக்கு பரி வட்டம் கட்டி கவுரவிக்கப்பட்டது. குடும்ப சகிதமாக நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சங்க தலைவர் அர்ஜுனன், பொது செயலாளர் இளவரசு, பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.