பாலங்களில் துாய்மை பணி
உடுமலை; உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள பாலங்களை துாய்மைப்படுத்தும் பணி, நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை செஞ்சேரிமலை ரோடு, உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால், மாவட்ட முக்கிய சாலைகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில், பல்வேறு இடங்களில், மழை நீர் ஓடைகள் குறுக்கிடுகிறது. பருவமழை காலத்தில், அப்பாலங்களில் மழை நீர் தடையில்லாமல் செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலத்தின் இருபுறங்களிலும், துார்வாரி, புதர்களை அகற்றி துாய்மைப்படுத்தி வருகின்றனர். வரத்து ஓடைகளிலும் துார்வாருவதால், தண்ணீர் தடையின்றி செல்லும். முதற்கட்டமாக, ஏரிப்பாளையம் முதல் புக்குளம் வரையிலுள்ள தரைமட்ட பாலங்கள், சிறு, குறு பாலங்களில் இப்பணிகள் தீவிரமாக நடக்கிறது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.