பெண்ணுக்கு பாலியல் தொல்லை துணிக்கடை உரிமையாளர் கைது
திருப்பூர்: அவிநாசியில், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த துணிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.சிவகாசியைச் சேர்ந்தவர் செல்வ பெருமாள், 50. அவிநாசி, திருப்பூர் ரோட்டில், துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது துணிக்கடையில் வேலை பார்க்கும் 21 வயது பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார்.அப்பெண் நேற்று அவிநாசி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், பெண் வன்கொடுமை, பி.சி.ஆர்., என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, செல்வ பெருமாளைகைது செய்தனர்.