உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பை கபடி போட்டி

முதல்வர் கோப்பை கபடி போட்டி

திருப்பூர் : திருப்பூரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை கபடி போட்டியில், வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.திருப்பூர் மாவட்ட, முதல்வர் கோப்பை கபடி போட்டி, 17 மற்றும், 18ம் தேதி இரு நாட்கள், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து, மாவட்ட அமெச்சூர் கபடி கழக விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.பெண்கள் பிரிவுக்கான போட்டி முதல் நாளில் முடிந்த நிலையில், ஆண்கள் பிரிவுக்கான போட்டிக்கு அணிகள் பதிவு அதிகமாக இருந்தது. குறிப்பாக, பள்ளி மாணவர் பிரிவில், 88 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றதால், ஒரே நாளில் போட்டிகளை நடத்தி முடிக்க முடியவில்லை.கடந்த, 18ம் தேதி இரவு, 11:00 மணியை தாண்டியும் நடந்த போட்டி, மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு முடிவடைந்தது. பள்ளி மாணவர்கள் பிரிவில், வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் பள்ளி அணி முதலிடம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு பள்ளி அணி இரண்டாமிடம், உடுமலை - எலையமுத்துார் எஸ்.என்.வி., பள்ளி அணி மூன்றாமிடம் பெற்றது.வடக்கு குறுமைய கபடி போட்டியில் வெல்ல முடியாத அணியாக இருந்த வி.கே., அரசு பள்ளி, முதல்வர் கோப்பை கபடி போட்டியிலும் கோலோச்சியது, குறிப்பிடத்தக்கது.

கல்லுாரி மாணவர் பிரிவு

கல்லுாரி மாணவர்கள் பிரிவில், 25 அணிகள் பங்கேற்றன. காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதலிடம், உடுமலை, கமலம் கல்லுாரி இரண்டாமிடம்.அரசு ஊழியர்களுக்கான ஆண்கள் பிரிவில் புல்ஸ் அணி முதலிடம் பெற்றது; ரூரல் போலீஸ் அணி இரண்டாமிடம், ஆயுதப்படை போலீஸ் மூன்றாமிடம் பெற்றது.பொதுமக்கள் (ஆண்கள்) பிரிவில், 19 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றன. திருப்பூர் ஜெயசித்ரா கபடி அணி முதலிடம், சி.எஸ்.இ., செட்டிபாளையம் அணி இரண்டாமிடம், ஜி.சி.எம்., திருப்பூர் அணி மூன்றாமிடம் பெற்றது.வெற்றி பெற்ற அணி வீரர்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக சேர்மன் கொங்கு முருகேசன், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் உள்ளிட்டோர் பாராட்டி, சான்றிதழ், கோப்பை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை