மேலும் செய்திகள்
ரூ.5.52 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
20-Jul-2025
வெள்ளகோவில் : முத்துாரில் நடந்த தேங்காய் ஏலத்தில், 4 லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய்க்கு தேங்காய் ஏலம் போனது. முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கொப்பரை ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், 600 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக கிலோ, 200.80 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 110.40 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 600 கிலோ கொப்பரை ஒரு லட்சத்து, 9 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 35 விவசாயிகள் பங்கேற்றனர். விற்பனை கூடத்துக்கு, 83 பேர், 18,566 தேங்காய்களை கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் கிலோ, 60.15 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 51.05 ரூபாய்க்கும், சராசரி, 58.25 ரூபாய்க்கும் ஏலம் போனது. 7.6 டன் விற்பனை தேங்காய்கள் மொத்தம், 4 லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
20-Jul-2025