உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தென்னந்தடுக்கு உற்பத்தி தொடர் பாதிப்பு; அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு  

 தென்னந்தடுக்கு உற்பத்தி தொடர் பாதிப்பு; அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு  

உடுமலை: தொடர் மழை காரணமாக, தென்னந்தடுக்கு உற்பத்தி தொழில் முடங்கி, பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், நல வாரியம் உள்ளிட்ட அரசின் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதியில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியை ஆதாரமாக கொண்டு, நார் உற்பத்தி, தென்னந்தடுக்கு பின்னுதல், சீமாறு உற்பத்தி என பல்வேறு உபதொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதில், ஜல்லிபட்டி, தினைக்குளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக தென்னந்தடுக்கு உற்பத்தி செய்யும் தொழில் உள்ளது. சுற்றுப்பகுதியிலுள்ள தோப்புகளில் மட்டைகளை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து தடுக்கு பின்னுகின்றனர். வெயில் காலத்தில், பந்தல் அமைத்தல், குடிசை மேற்கூரை என பல்வேறு இடங்களில், இவ்வகை தென்னந்தடுக்குகள் பயன்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தியாகும், தடுக்குகள், பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு, தனி நபர் ஒருவர், 100 தடுக்கு வீதம், 2,000 ஆயிரம் தடுக்குகள் வரை பின்னுகின்றனர். பின்னர் அவற்றை, 25 தடுக்குகள் கொண்ட கட்டுகளாக கட்டி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்த சில வாரங்களாக, தொடர் மழை காரணமாக, பிற மாவட்டங்களுக்கு, தடுக்கு அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் கூறியதாவது: ஜல்லிபட்டி பகுதியில், தென்னந்தடுக்கு பின்னும் தொழில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, விற்பனையில் பாதிப்பு காரணமாக தொழில் தள்ளாடி வருகிறது. எனவே தமிழக அரசு, நல வாரியம் வாயிலாக எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தடுக்கு பின்னுவதற்கு, நிரந்தர நிழற்கூரை மற்றும் இருப்பு வைக்க குடோன் கட்டிக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்