உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி அதிகாரிகள் பெயரில் வசூல் ஆடியோ வைரல்

மாநகராட்சி அதிகாரிகள் பெயரில் வசூல் ஆடியோ வைரல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் பணம் வசூலிக்க கூறியதாக, வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஏராளமான நபர்கள் நடைபதையொட்டி, ரோட்டோரம் தற்காலிக கடைகளை அமைத்திருந்தனர்.கடைகளில் அதிகாரிகள் பணம் பெற சொல்வதாக கூறி, ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், கடைக்கு ரூ.100 வசூலிப்பதாகவும், ஒருவரே, மூன்று கடை போட்டிருந்தால், அவர்களிடம் தலா, ஒரு கடைக்கு ரூ.150 வசூலிப்பதாகவும், அதில் பேசியிருந்த பெண் தெரிவித்தார்.இதையடுத்து, எதிர்முனையில் பேசியவர், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் யார் பணம் பெற சொன்னது என, அந்த பெண்ணிடம் கேட்கவே, அந்த பெண் ஒருவர் பெயரை சொல்லி அலுவலகத்தில் இருந்து தான் பணம் பெற சொன்னார்கள். நீங்கள் யார் என்று கேட்கவே, அதற்கும் பதில் சொல்லாமல், ஆடியோ துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆடியோ பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை