உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டர் ஐயா... கருணை காட்டுங்க!

கலெக்டர் ஐயா... கருணை காட்டுங்க!

உடுமலை, சின்னபொம்மன் பகுதியை சேர்ந்த பெண்கள் 50 பேர், வெங்காயம் அறுவடைக்காக, கடந்த ஆக., 31ம் தேதி, சரக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். வாளவாடி - பெரியகுளம் ரோட்டில், வாகனம் கவிழ்ந்தது. இதில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் கருப்பாத்தாள், ராதா, ஜீவா, கன்னியம்மாள், சுப்புலட்சுமி உள்ளிட்டோர், குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, அளித்த மனு குறித்து கூறியதாவது:விவசாய வேலைக்கு சென்ற போது, வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கை, கால் எலும்பு முறிவு உள்பட படுகாயங்களுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.தென்குமாரபாளையத்தை சேர்ந்த சரக்கு வாகன உரிமையாளர், மருத்துவ செலவினம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக சொன்னார். அதனால், போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால், இதுவரை இழப்பீடும் வழங்காததோடு, உடுமலை போலீசில் பொய் புகார் பதிவு செய்துள்ளனர்.சட்ட விரோதமாக சரக்கு வாகனத்தில் எங்களை அழைத்து சென்று விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் பெற்றுத்தரவேண்டும்.இவ்வாறு, பெண்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி