கல்லுாரி மாணவியர் அபாரம்
முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரியில் நடந்த உலக சேலைகள் தின நிகழ்ச்சியில், மாநிலங்களின் சின்னங்கள் சேலைகளில் வடிவமைக்கப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த படோலா, கேரளாவின் கதகளி, ராஜஸ்தானின் அஜ்ராக் அச்சு, தமிழகத்தின் கோவில் வடிவங்கள், மஹாராஷ்டிராவின் நவாரி, ஹிமாச்சல பிரதேசத்தின் ரிஷ்டா உள்ளிட்ட வடிவமைப்புகள் சேலைகளில் மாணவியரின் கைவண்ணத்தில் அச்சுகளாக வார்க்கப்பட்டது.பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்புக் காட்சிகளை உயிர்ப்பிக்க தென்னை நார் பாய்கள், 'அக்ரிலிக்' வண்ணப்பூச்சுகள் மற்றும் மார்க்கர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தினர். மாணவியரின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை, முதலாம் ஆண்டு ஆடை வடிவமைப்பு துறை ஏற்பாடு செய்திருந்தது.---சேலைகள் தினத்தையொட்டி, தென்னை நார் பாய்கள் மீது, சேலைகளின் வடிவத்துடன் தங்கள் படைப்பாற்றலையும், கற்பனைத்திறனையும் வெளிக்கொணர்ந்து மாணவ, மாணவியர் அழகூட்டினர்.