உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாறு சதவீதம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு

நுாறு சதவீதம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு

உடுமலை, ; பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் பெற்றதற்கு, அம்மாபட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு, அம்மாபட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயனுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து நுாறு சதவீத தேர்ச்சிக்கான பெருமையை கொண்டாடும் வகையில் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் தலைமை வகித்தார். ஆசிரியர் வேல்விழி, முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் உமாராணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவர்களின் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ