உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை அமைக்க உறுதி; உண்ணாவிரதம் வாபஸ்

சாலை அமைக்க உறுதி; உண்ணாவிரதம் வாபஸ்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, 1வது வார்டு ஸ்ரீனிவாசா நகரில் உள்ள மூன்று வீதிகளில், ரோடு மற்றும் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1.05 லட்சம் ரூபாய் ஊராட்சியில் செலுத்தப்பட்டது.இரண்டு வீதிகளில் ரோடு அமைக்கப்பட்டது. ஒரு வீதியில் போடப்படவில்லை. விடுபட்ட வீதியில் ரோடு போடுவது குறித்து, ஊராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.குடியிருப்போர் நல சங்கத்தினர், நேற்று காலை கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் வீரக்குமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து, ஒரு மாதத்திற்குள் முதல் கட்டமாக சாக்கடை கால்வாய் கட்டி தருவதாகவும், அதை தொடர்ந்து மூன்று மாதத்தில் ரோடு அமைத்து தருவதாகவும் உறுதி கூறினர். அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை