மேலும் செய்திகள்
மின் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
21-Nov-2024
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, திரு.வி.க., நகர் மற்றும் எல்.ஐ.சி., காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், குப்பை இல்லாத பகுதியாக மாற்றுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.குடியிருப்போர் நலச்சங்க தலைவர் 'மெஜஸ்டிக்' கந்தசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் சின்னசாமி, நலச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பேசினர். இப்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.பங்கேற்ற மக்கள் தங்கள் பகுதியை குப்பை இல்லாத பகுதியாக மாற்றும் வகையில், குப்பைகளை தரம் பிரித்து வழங்க உறுதி அளித்தனர். சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.
21-Nov-2024