உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

அவிநாசி; அமெரிக்க அரசின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்து, இந்திய கம்யூ., - மா.கம்யூ., ஆகியன சார்பில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் காமராஜ், இ.கம்யூ., புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் நதியா, மாநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் பேசினர். அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டி உட்பட பகுதிகளை சேர்ந்த கம்யூ., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்