பாதியில் நிற்கும் கால்வாய் பணி நோய் பரவும் அபாயம் என புகார்
அவிநாசி : அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் பெரியகருணைபாளையம்,கருணாம்பிகை நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த 2022--23ம் ஆண்டு15வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் நடைபெற்றது.அதில், கழிவு நீர் வடிகால் அமைத்தல் பணி ஒன்று முதல் மூன்றாவது வீதி வரை முடிவடைந்தது. நான்காவது வீதியில், 2.5 லட்சம் மதிப்பில் நடைபெற்ற கழிவுநீர் வடிகால் பணிகள் முழுமை பெறாமல் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், கருணாம்பிகை நகர் பகுதியில்உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒட்டுமொத்தமாக நான்காவது வீதியின் நுழைவுப் பகுதியில் குட்டை போல தேங்கி நின்றுள்ளது.பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் பணியால், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது. நோய்த் தொற்றுகள்அந்தப் பகுதியில் பரவி வருகிறது.நான்காவது வீதிக்கு செல்ல கான்கிரீட் ரோடு பணிகளும் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர் வடிகால் பணியை முடித்து கழிவுநீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.