உள்ளூர் செய்திகள்

உ டலினை உறுதி செய்

அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர், மாரிமுத்து, 49; மாநில தடகள வீரரும் கூட. ஈட்டி மற்றும் வட்டுஎறிதலில் தொடர் கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். தேசிய தடகள போட்டிகளில் வெற்றி பெற்று, தமிழக சீனியர் தடகள அணியில் வீரராக இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்து வருகிறார்.அவர் கூறியதாவது:ஆயுள் முழுக்க ஒரு மனிதன் நோயில்லாமல் வாழ உடற்பயிற்சி அவசியம். அதிகாலை உடற்பயிற்சி, உடலை உறுதிசெய்து, முழு உடலையும் தயார்படுத்துகிறது; நாள் முழுதும் புத்துணர்வை தருகிறது.உடற்பயிற்சியும், விளையாட்டும் இரு கண்களாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.இளமையை பேணி பாதுகாத்து, மிடுக்கான தோற்றத்துடன் வாழ வேண்டுமெனில், அதிகாலையில் எழ வேண்டும். உடற்பயிற்சி, ஏதேனும் ஒரு விளையாட்டு, அதன் நிறைவில் யோகாசனம், மூச்சுப்பயிற்சி செய்வது அன்றைய நாளே சுறுசுறுப்பாகும். உறுதியான உடலை பெற நாம் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை