உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் ஸ்டேஷன் முன் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

போலீஸ் ஸ்டேஷன் முன் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

உடுமலை; உடுமலையில் போலீசார் பறிமுதல் செய்த, குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் பாதுகாப்பின்றி, மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வருகிறது. உடுமலை போலீஸ் சார்பில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இவ்வாறு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முறையாக பராமரிக்காமலும், பாதுகாப்பு இல்லாமலும், உடுமலை ஸ்டேஷன் முன், குட்டைத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவை, வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், உரிய பாதுகாப்பு இல்லாமல், வீணாகி வருகின்றன. வழக்கமாக, இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், முறையாக பாதுகாக்கப்பட்டு, அவ்வப்போது, போலீசாரால் பொது ஏலத்தில் விடப்படும். இதன் வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், உடுமலை ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், குட்டைத்திடல் மற்றும் தனியார் நிலத்தில், உரிய பாதுகாப்பு இல்லாமல், வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் வீணாகி, யாருக்கும் பயன்படாத நிலையில் உள்ளது. எனவே, வழக்கில் தொடர்புடைய வாகனங்களை பாதுகாப்பாக பராமரிக்கவும், அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை