உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர்;வீரபாண்டி ஜெ.ஜெ., நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை தனி தாசில்தார் குழுவினர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு சோதனை செய்தனர்.மூன்றாவது வீதியில் கடத்தலுக்காக வைத்திருந்த ரேஷன் அரிசி, 326 கிலோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கடத்தல் தொடர்பாக, கரட்டாங்காட்டை சேர்ந்த ரகுபதியிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி