உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முக்கிய வீதிகளில் நெரிசல்; நிரந்தர தீர்வு எப்போது?

முக்கிய வீதிகளில் நெரிசல்; நிரந்தர தீர்வு எப்போது?

உடுமலை; நகரில் நெரிசல் மிகுந்த வீதிகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வாகன ஓட்டுநர்கள் திணறுவது தொடர்கதையாக உள்ளது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்தள்ள உடுமலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. நகரில், வ.உசி., வீதி, சீனிவாசா வீதி, பசுபதி வீதி, தளி ரோடு, கச்சேரி வீதி ஆகிய வீதிகளில், வணிக கடைகள் அதிகளவு அமைந்துள்ளன.மிக குறுகலான, இந்த ரோட்டில், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு, பொருட்கள் கடைக்கு இறக்கப்படுகிறது. அதே போல், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், கடைகள் முன் வரிசையாக, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.அப்போது, பிற வாகனங்கள் செல்ல இடைவெளி கிடைக்காமல், அந்த வீதிகளில், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. சில சமயங்களில் சிறிய விபத்துகளும் ஏற்படுகின்றன.வாரத்தில், பல நாட்கள் இப்பிரச்னை, நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள் நகரப்பகுதிக்குள் செல்லவே அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் செல்லவும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.நீண்ட காலமாக இப்பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். எனவே, உடுமலை நகரில் பார்க்கிங் விதிமுறைகளை அமல்படுத்த, நகராட்சி, போக்குவரத்து போலீஸ், வருவாய்த்துறையினர் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். இதன் வாயிலாக, நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ