மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
16-Sep-2025
உடுமலை; தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமிக்கு உடுமலை அபெக்ஸ் கிளப் சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடுமலை அபெக்ஸ் கிளப் மாதாந்திர கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் பிரசாத் தலைமை வகித்தார். கூட்டத்தில், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற, பாரதியார் நூற்றாண்டு விழா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமிக்கு அபெக்ஸ் கிளப் சார்பில், நிர்வாகிகள், பழனிசாமி, பாலசுப்பிரமணியன் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்துக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை தேடி தந்ததாக ஆசிரியர் விஜயலட்சுமியை நிர்வாகிகள் பாராட்டி பேசினர். கிளப் தலைவர் சந்திரன், செயலாளர் சீத்தாராமன் மற்றும் மூத்த ஆயுள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிர்வாகி மணிகுமார் நன்றி தெரிவித்தார்.
16-Sep-2025