உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ் வார விழா போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

தமிழ் வார விழா போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

உடுமலை; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, பள்ளிகளில் தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி அளவிலும், வட்டார மற்றும் மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டிகள் நடந்தன.இதில், திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.அதில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். மாணவி சுருதிகா கட்டுரைப்போட்டியில் முதலிடம், மாணவி அர்ஷின்சானா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவியருக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ், தமிழாசிரியர் சின்னராசு, பள்ளி இலக்கிய மன்ற செயலாளர் ராஜேந்திரன், ஆசிரியர் விஜயலட்சுமி உட்பட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை