உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்., மாவட்ட செயற்குழு கூட்டம்

காங்., மாவட்ட செயற்குழு கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., செயற்குழு கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில பார்வையாளர்கள் அழகு ஜெயபாலன், மகேஷ்குமார், செல்வகுமார், மரகதம் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரும் டிச., 28ல் காங்., நிறுவன நாள் விழா அனைத்துப் பகுதியிலும் நடத்துவது; இந்திய அரசியல் சட்ட நிர்ணய நாள் நவ., 26ல் நடத்துவது; மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சிகளில் தலைவர் பதவியை பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு உறுப்பினர் பதவியாவது பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை