மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாநகர மாவட்ட காங்., கமிட்டி சார்பில், குமரன் சிலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கோபால்சாமி, ஈஸ்வரன், மாநகர் துணை தலைவர் கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றோர் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர்.