உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டி முடித்த மூன்றே நாளில் விரிசல் விழுந்த கட்டுமானம்; இப்படியும் ஒரு தரம்

கட்டி முடித்த மூன்றே நாளில் விரிசல் விழுந்த கட்டுமானம்; இப்படியும் ஒரு தரம்

பல்லடம், : பல்லடம் நகராட்சியில், கட்டி முடிந்த மூன்றே நாளில், கட்டடத்தில் விரிசல் விழுந்ததை தொடர்ந்து, கட்டுமானத்தின் உறுதி தன்மை வெளிப்பட்டுள்ளது.பல்லடம் நகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட ராயர்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு தண்ணீர் டேங்க் வைப்பதற்கான மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது.மேடை கட்டப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், கட்டுமான தொழிலாளர்கள், தண்ணீர் டேங்க்கை மேலே ஏற்றி வைத்து தண்ணீர் நிரம்பி சோதனை செய்தனர். இதில், பாரம் தாங்காமல் மேடையில் விரிசல் ஏற்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாட்களில் மேடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, கட்டுமானத்தில் எந்த அளவு 'உறுதி' தன்மை உள்ளது என்பது வெளிப்பட்டு உள்ளது. இதையடுத்து, மீண்டும் தண்ணீர் டேங்கை கீழே இறக்கி வைத்து விட்டு, மேடையில் ஒட்டு வேலை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட துவங்கினர். அதிர்ஷ்டவசமாக, கட்டும் போதே இதன் உறுதித் தன்மை வெளிப்பட்டதால், பெரும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.எனவே, மேடையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ