உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்தது. இதில், 17 விவசாயிகள் 119 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்; 8 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். முதல் தரம் கிலோ ரூ. 230.17 முதல் 243 ரூபாய் வரையும் ஏலம் போனது. இரண்டாம் தரம் கிலோ 140 முதல் 225.10 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்து, ஏலம் இறுதி செய்யப்பட்டது. ஏலம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளரை, 9443962834 மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி