உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

உடுமலை; உடுமலை வேளாண் துறையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, சோளம் விதைகள் வழங்கப்படுகிறது.வேளாண் துறை சார்பில் சான்று பெற்ற, 'வம்பன்-8' ரக உளுந்து மற்றும் 'கோ-32' சோள விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்து உரங்களும் குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ