உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10 நாள் குடிநீர் நிறுத்தம்:  மாநகராட்சி அறிவிப்பு

10 நாள் குடிநீர் நிறுத்தம்:  மாநகராட்சி அறிவிப்பு

திருப்பூர், நவ. 12-இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 10 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சிக்கு, 2வது குடிநீர் திட்டத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் வருகிறது. இக்குழாய்கள் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணி நடப்பதால், 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் னெ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் நான்காவது திட்ட குடிநீர் பெறப்படும் பகுதியில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடிநீர் கலங்கலாக வருகிறது. இதனால், அத்திட்டத்தில் ஒரு நாள் குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படாது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டிப் பயன்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை