மாநகராட்சி சொத்து வரி யு.பி.ஐ., மூலம் செலுத்தலாம்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில் சொத்து வரி மற்றும் காலியிட வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக விடுமுறை நாட்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இது தவிர வரி வசூலிப்பாளர்கள் வீடுகள் தோறும் சென்று வரி வசூல் செய்கின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் வரி செலுத்த ஏதுவாக 'ஜி பே', 'போன் பே', 'பேடிஎம்' போன்றவை மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் தினேஷ்குமார், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை மேயர் பாலசுப்ரமணியம், உதவி கமிஷனர் (கணக்கு) தங்கவேல்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.