சொத்து வரி செலுத்த மாநகராட்சி அழைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா அறிக்கை: மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்துவோர் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்., 31 ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம்.மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் கட்டணங்களை, நேரடியாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை, வேலை நாட்களில் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை செலுத்தலாம். மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள்; குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப் பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகர் ஆகிய வரி வசூல் மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.ஆன்லைன் வாயிலாக, https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேரடியாக வரும் வரி வசூல் பணியாளர்களிடமும், மையங்களிலும், ஏ.டி.எம்., மற்றும் கிரடிட் கார்டு, கியூ ஆர் கோடு ஸ்கேன் வாயிலாகவும் செலுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.n மாநகராட்சி பகுதியில், கடந்த மற்றும் நடப்பு நிதியாண்டுகளில், 1.73 லட்சம் பேர் தங்கள் சொத்து வரியை செலுத்தி, 1.7 கோடி ரூபாய் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.