உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஞ்சு விலை அதிகரிப்பு; நுால் விலை உயர்ந்தது

பஞ்சு விலை அதிகரிப்பு; நுால் விலை உயர்ந்தது

திருப்பூர்; கடந்த சில வாரங்களாக பஞ்சு விலை படிப்படியாக உயர்ந்து வருவதால், ெஹாசைரி நுால் விலை கிலோவுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது. இந்திய பருத்தி சங்கத்தின் அறிக்கையின்படி, நடப்பு பருத்தி ஆண்டில் (அக்., 2024 - செப்., 2025), கடந்த 31ம் தேதி வரை, 299 லட்சம் பேல்களுக்கும்(ஒரு பேல் - 170 கிலோ) அதிகமான பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது; கடந்த மாதம் மட்டும், 3.31 லட்சம் பேல் விற்பனையாகியுள்ளது. சீசன் நிறைவடைய இருப்பதால், இருப்பு வைத்திருந்த பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது; தினசரி வரத்து, 8,500 பேல்களாக குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டில், பருத்தி மகசூல் குறைந்து, உள்நாட்டு தேவை பூர்த்தியாகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்து, தேவை அதிகரித்ததால், பஞ்சு விலை கடந்த சில வாரங்களாக உயரத்துவங்கியுள்ளது. கடந்த, 31ம் தேதி நிலவரப்படி, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 56 ஆயிரம் ரூபாய் முதல், 57 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது; வரும் வாரங்களில், மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது. நுால் விலை ரூ.5 உயர்வு பஞ்சு விலை உயர்வு காரணமாக, நுாற்பாலைகள், பின்னலாடை உற்பத்திக்குப் பயன்படும், ெஹாசைரி நுால் விலையை, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தியுள்ளன. நுாற்பாலைகள் அறிவித்துள்ளபடி, நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 'கோம்டு' ரக நுால்: ஒரு கிலோ (வரி நீங்கலாக), 20ம் நம்பர் - 261 ரூபாய், 25ம் நம்பர் - 266 ரூபாய், 30ம் நம்பர் - 271 ரூபாய், 34ம் நம்பர் நுால் 279 ரூபாய்; 40ம் நம்பர் 297 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'செமி கோம்டு' ரக நுால்: 20ம் நம்பர் - 251 ரூபாய், 25ம் நம்பர் 256 ரூபாய், 30ம் நம்பர் - 261 ரூபாய், 34 ம் நம்பர் - 269 ரூபாய், 40ம் நம்பர் -287 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. நடப்பு ஆண்டு துவங்கிய பிறகு, ஏப்., மாதம், கிலோவுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டது; பெரும்பாலான நுாற்பாலைகள், விலை உயர்வு செய்யவில்லை. பஞ்சு விலை உயர்ந்துள்ளதால், நேற்று, பெரும்பாலான நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தியுள்ளன. வாடிக்கையாளர் வசதிக்காக, வழக்கமான விலையே தொடரும் என்று, சில நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. பாதிப்பு இருக்காது பஞ்சு விலை உயரும் போது, நுால் விலை உயர்வது வாடிக்கையானது. வரும் அக்., மாதம் புதிய பருத்தி சீசன் துவங்கும். அதுவரை, சிறிய விலை உயர்வு இருக்கலாம்; பிறகு சீராகலாம். சிறிய நுால் விலை உயர்வால், உற்பத்தியில் பெரிய பாதிப்பு இருக்காது. - பின்னலாடை உற்பத்தியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ