கவுன்சிலர்கள் புகார் எதிரொலி; வார்டுகளில் கமிஷனர் ஆய்வு
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பங்கேற்ற தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., கட்சி கவுன்சிலர் செந்தில்குமார், எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அ.தி.மு.க., கவுன்சிலர் சேகர் உள்ளிட்டோர் தங்கள் வார்டுகளில் நிலவும் நீண்ட கால பிரச்னை குறித்து புகார்களை அடுக்கினர். இதன் எதிரொலியாக, 28வது வார்டு திரு.வி.க., நகரில் உள்ள பூங்கா, 42வது வார்டு, கே.வி.ஆர்., நகரில் பாதாள சாக்கடை செயல்பாடு, போர்வெல் மற்றும் தண்ணீர் தொட்டி பாராமரிப்பு பணிகள், தார் ரோடு பணி, 51வது வார்டு ெஷரீப் காலனி, குறிஞ்சிநகர், தெற்கு தோட்டத்தில் புதிதாக போடப்படும் தார் ரோடு, மழைநீர் வடிகால், அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் அமித் நேற்று கள ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.