வங்கி முன் தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
உடுமலை, ; மடத்துக்குளம் தாலுகா, கணியூரில் கனரா வங்கி உள்ளது. இங்கு, தாமோதரன், 50, அவரது மனைவி, 44, ஆகிய இருவரும் கணக்கு வைத்துள்ளனர். மூன்று ஆண்டுக்கு முன், கடன் ஜாமீன் கொடுத்த நபர் இறந்த நிலையில், அக்கணக்கை முடிக்காமல், வங்கி மேலாளர், தம்பதியினர் அடமான நகை மற்றும் நிலம் அடமான பத்திரம் மற்றும் வங்கிக்கணக்கை முடக்கியுள்ளனர்.இதே போல்,இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில்லை என புகார் உள்ளது.நேற்று வங்கிக்கு வந்த தம்பதியினரை, வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் மிரட்டியதால், பெயிண்ட் கலக்க பயன்படும் தின்னரை இருவரும் உடல் மேல் ஊற்றி, தீ வைத்து தற்கொலைக்கு முயன்றனர்.உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கணியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கி முன் தம்பதியினர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.