ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாடு
திருப்பூர்; காங்கயம் - சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் விரதம் இருந்து குழுவாக சென்றும், காவடி எடுத்தும் வந்து என, பல வகைகளில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.ஒரு சிலர் தங்களின் மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்துள்ளது பக்தர்களை கவர்ந்தது.