வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாஸ்மாக் நடத்தும் இன்றைய திமுக அரசு குட்டியாப்பான் போன்றவர்களுக்கு ஒரு விடியல் திட்டத்தை கொண்டுவந்திருக்கலாம்
மகனை கொன்ற தந்தை கைதுதிருப்பூர்: திருப்பூர், கல்லம்பாளையத்தை சேர்ந்தவர் கன்னியப்பன், 60; கட்டட தொழிலாளி. இவரது மகன் குட்டியப்பன், 32; டெய்லர். இவர், மனைவியை பிரிந்து வாழ்கிறார். நேற்று முன்தினம் இரவு, குட்டியப்பன் மது அருந்த, கன்னியப்பனிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். ஆத்திரமடைந்த கன்னியப்பன், கல்லால் அடித்து மகனை கொன்றார். கன்னியப்பனை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். துப்புரவு தொழிலாளி கொலை ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, சீனிவாசன்பேட்டையை சேர்ந்தவர் எல்லப்பன், 52. இவர், அம்மூர் பேரூராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர். இவருக்கு, மனைவி, இரு மகள்கள் உள்ளனர். நேற்று காலை மாந்தாங்கல் பகுதியில் தனியார் காஸ் நிறுவனம் அருகே உள்ள முட்புதரில் முகம் சிதைந்த நிலையில், எல்லப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை யார் கொலை செய்தது என தெரியவில்லை. ராணிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபரை கொன்ற 4 பேர் சரண் தஞ்சாவூர்: தஞ்சாவூர், பாத்திமா நகரை சேர்ந்த சக்தி, 23, என்பவருக்கும், தில்லை நகரை சேர்ந்த திலகன், 22, என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. திலகன் நண்பர் சசிகுமார், சக்தியிடம் பிரச்னை குறித்து கேட்டதில் தகராறு ஏற்பட்டது. சக்தி, அவரது தம்பி கோகுல் ஆகியோர், சசிகுமாரை செப்., 9ல் வெட்டி கொலை செய்தனர். தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடினர். சக்தி, 20, அவரது தம்பி கோகுல், 19, சஞ்சய், 19, பிரபாகர், 20, ஆகிய நான்கு பேரும், தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
டாஸ்மாக் நடத்தும் இன்றைய திமுக அரசு குட்டியாப்பான் போன்றவர்களுக்கு ஒரு விடியல் திட்டத்தை கொண்டுவந்திருக்கலாம்