உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர் சாகுபடி பணி தீவிரம்; உரம் போதுமான இருப்பு

பயிர் சாகுபடி பணி தீவிரம்; உரம் போதுமான இருப்பு

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு அறிக்கை: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். பயிர்களுக்கு தேவையான அனைத்து உரங்களும், உரிமம் பெற்றுள்ள தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், போதியளவில் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. மாவட்டத்தில், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில், 2,150 மெட்ரிக் டன் யூரியா; 951 மெட்ரிக் டன் டி.ஏ.பி.,; 1,360 டன் பொட்டாஷ், 815 டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும், 4,509 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது. உரங்களின் இருப்பு மற்றும் வினியோகத்தை, மாவட்ட அளவிலான உரக்கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது விதிமீறல். யூரியா விற்பனையில், தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து பதுக்குவது அல்லது பிற பயன்பாட்டிற்கு யூரியாவை அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானது. விதிமீறல் கண்டறியப்பட்டால், அந்த சில்லறை விற்பனை நிலையத்தின் உரிமம், நிரந்தரமாக தடை செய்யப்படும்; கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் தேவைக்கேற்றாற் போல், அனைத்து வகை உரங்களையும் விற்பனை செய்ய வேண்டும். உரத்துடன், பிற இணைப்பு பொருட்களான நுண்சத்துகள், உயிர்ம ஊக்கிகள் மற்றும் டானிக்குகள் என்ற பெயரில் வேறெந்த பொருட்களையும் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை