சாம்பார் வெள்ளரி சாகுபடி; கைகொடுக்கும் கேரளா
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்று பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு காய்கறி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இப்பகுதியில் இருந்து, கேரளா மறையூர், மூணாறு மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு, பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். எனவே, அங்கு அதிக தேவையுள்ள காய்கறிகளை சாகுபடிக்கு தேர்வு செய்கின்றனர்.அவ்வகையில், பொரியல்தட்டை, பூசணியுடன் சாம்பார் வெள்ளரி சாகுபடிக்கும் உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வகை வெள்ளரிக்கு, ஆண்டு முழுவதும் கேரளாவில் தேவை உள்ளது. மேலும்,வியாபாரிகளும் நேரடியாக கொள்முதல் செய்து கொள்கின்றனர். மருள்பட்டி உள்ளிட்ட பல இடங்களில், சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.