உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சிலை சேதம்: மர்மநபர்கள் அட்டூழியம்

விநாயகர் சிலை சேதம்: மர்மநபர்கள் அட்டூழியம்

அரூர்:அரூர் அருகே, மர்மநபர்களால் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டி பஸ் நிறுத்தத்திலுள்ள ஆலமரத்தடியில், விநாயகர் சிலையை வைத்து, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் விநாயகர் சிலையை, உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து அரூர் எஸ்.ஐ., உதயகுமார் விசாரணை மேற்கொண்டார். அதில், மர்ம நபர்கள் விநாயகர் சிலையை திருடி வேறு ஒரு இடத்தில் வைக்க, கடப்பாரை கொண்டு சிலையை பெயர்க்கும்போது, சிலை சேதமடைந்ததாகவும், சிலை அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, சம்பவம் நடப்பதற்கு முன், விநாயகர் சிலை அருகில் இளைஞர்கள், 5 பேர் அமர்ந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி