பாலத்தின் சுற்றுச்சுவர் சேதம்
காட்டூர் ஊராட்சி காரப்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. வாகன ஓட்டிகள் கொஞ்சம் அசந்தாலும் வாய்க்காலில் தவறி விழும்வாய்ப்பு உள்ளது. சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.