மேல்நிலை தொட்டியால் காத்திருக்கும் ஆபத்து
பல்லடம்: பல்லடம் அருகே, சேதமடைந்து காணப்படும் நீர் தேக்க தொட்டியால், பொதுமக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, தெற்குபாளையம், முத்துநகர் கிராமத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இத்தொட்டி, மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இத்தொட்டி, கடந்த, 2012--13ம் ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மீண்டும் இத்தொட்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.நீர் தேக்க தொட்டியின் பல்வேறு இடங்களில், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, இதிலுள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. குறிப்பாக, தொட்டியை தாங்கி நிற்கும் சிமென்ட் பில்லர்கள் கடுமையாக சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கின்றன. இருப்பினும், தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.விபத்து ஏற்படும் முன் நீர் தேக்க தொட்டியை பராமரிக்க வேண்டும். அல்லது இதன் உறுதி தன்மையை ஆய்வு செய்து, தேவையெனில், தொட்டியை இடித்து அகற்றிவிட்டுபுதிய நீர்த்தேக்க தொட் டியை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.