உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

பல்லடம்: பல்லடம்- - பொள்ளாச்சி - உடுமலை செல்லும் நெடுஞ்சாலை வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையம் பகுதியில், மன நலம் பாதித்த முதியவர் ஒருவர், கிழிந்த துணிகள், அழுக்கடைந்த துணிப்பை, பெட்ஷீட் சகிதமாக, நெடுஞ்சாலையில் உலா வருகிறார். கை, கால்களை நீட்டியும், நடுரோட்டில் நின்றும், அடிக்கடி ரோட்டை கடப்பதுமான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். வாகனங்கள் மோதி முதியவருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுடன், வாகன ஓட்டிகளுக்கும் விபத்து அபாயம் உள்ளது. முதியவரை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !