உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டுப்போன மரம்; சாயும் அபாயம்

பட்டுப்போன மரம்; சாயும் அபாயம்

கால்வாய் அடைப்பு பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. – ரத்தினவேல், மாணிக்காபுரம். (படம்) திருப்பூர், மங்கலம் ரோடு பழக்குடோன் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. – மோகன், மங்கலம் ரோடு. (படம்) செரங்காடு – சந்திராபுரம் ரோட்டில் மழை பெய்யும்போதெல்லாம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறு போல் வழிந்தோடுகிறது. – ரமேஷ், சந்திராபுரம். (படம்) கழிவுகளால் இடையூறு பிச்சம்பாளையம், சொர்ணபுரி கார்டன் 5வது வீதியில் சாக்கடை கழிவு, மண் அள்ளி ரோட்டில் அப்படியே போடப்பட்டுள்ளது. – மனோஜ், சொர்ணபுரி கார்டன். (படம்) குப்பை தேக்கம் மங்கலம், பூக்களிப்பாளையத்தில் ரோட்டில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால் துர்நாற்றம் வீசுகிறது. – அருள் மார்ட்டின், பூக்களிப்பாளையம். (படம்) பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் வழிநெடுகிலும் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும். – பால்ராஜ், கொசவம்பாளையம். (படம்) கொடி படரலாமா? ஆண்டிபாளையம், பொது சுத்திகரிப்பு நிலையம் செல்லும் நொய்யல் ரோட்டில் உயர்கோபுர மின்கம்பம் மீது கொடி படர்ந்துள்ளது. – வரதராஜன், ஆண்டிபாளையம். (படம்) ஆபத்து காத்திருப்பு திருப்பூர், வாலிபாளையம் சாய்பாபா கோவில் அருகே பட்டுப்போன மரம் விழும் நிலையில் உள்ளது. அதற்கு முன்பாக பாதுகாப்பாக அகற்ற வேண்டும். – ரஞ்சித், வாலிபாளையம். (படம்) சாலை சேதம் தென்னம்பாளையம், ஸ்கூல் வீதி ரேஷன் கடை அருகே சாலை சேதமாகி மழைநீர் தேங்கியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். – செல்வராஜ், தென்னம்பாளையம். (படம்) தண்ணீர் வீண் திருப்பூர், தாராபுரம் ரோடு கே.எஸ்.சி. ஸ்கூல் சந்திப்பு சாலை அருகே குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. – அசோக், தாராபுரம் ரோடு. (படம்) ரியாக்ஷன் சாலை அமைப்பு பெருமாநல்லுார் – குன்னத்துார் ரோடு, வி.ஏ. ரெசிடென்சி சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதாக ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது புதிய ரோடு போடும் பணி துவங்கியுள்ளது. – ரேணுகா, மாந்தோட்டம். (படம்) சபாபதிபுரம், விநாயகர் கோவில் சுரங்கபாலம் சந்திப்பு பிரதான சாலை வளைவில் சாலை சேதமாகியிருந்தது குறித்து செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. – தீபக் டேனியல், சபாபதிபுரம். (படம்) கால்வாய் துாய்மை திருப்பூர், பத்மாவதிபுரம் கிழக்கு வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டன. – பழனிசாமி, பத்மாவதிபுரம். (படம்) மின்கம்பம் மாற்றம் திருப்பூர், 17வது வார்டு காட்டன்மில் ரோட்டில் மின்கம்பம் அடிப்பாகம் சேதமாகி விழும் நிலையில் இருந்தது. செய்தி வெளியானதும், மின்வாரிய ஊழியர்களால் மின் கம்பம் மாற்றப்பட்டுள்ளது. – முத்துராஜ், காட்டன் மில் ரோடு. (படம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ