உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் மாற்றத்தால் தீமைகள்: மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு

சுற்றுச்சூழல் மாற்றத்தால் தீமைகள்: மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு

அவிநாசி: பா.ஜ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் கோவை பெருங்கோட்ட மாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம், அவிநாசி அண்ணா அரங்கில் நடந்தது. மாநில இணை அமைப்பாளர் சுப்ரமணியம், மாநிலச் செயலாளர்கள் மூர்த்தி,மோகன் குமார், கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் சரண்யா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில தலைவர் கோபிநாத், பொதுச்செயலாளர் முருகானந்தம், கோவை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலக்குமார், கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதில் மண்டல் தலைவர் உள்பட மண்டல் கமிட்டி அமைப்பது, சுற்றுச்சூழல் மாற்றத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே கொண்டு செல்வது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, குப்பை மேலாண்மை, அதிகமான மரங்கள் நடுவது மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியை பிடிப்பதற்காக பணிகளை தீவிரமாக செய்வது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை