உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டவுன்ஹால் மாநாடு அரங்கம் வாடகைக்கு விட முடிவு 

டவுன்ஹால் மாநாடு அரங்கம் வாடகைக்கு விட முடிவு 

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான டவுன்ஹால் வளாகம், குமரன் ரோட்டில் அமைந்துள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 55 கோடி ரூபாய் மதிப்பில் பன்னோக்கு மாநாட்டு அரங்கம், 12 கோடி ரூபாய் மதிப்பில் பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா முடிந்து ஓர் ஆண்டாகியும், இரு வளாகங்களும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.இதனை டெண்டர் விடும் வகையில் இதுவரை, 10 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் ஒருமுறை கூட, ஒருவர் கூட இதை ஏலம் எடுக்க முன் வரவில்லை. இதையடுத்து, மாநகராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இதை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தினசரி வாடகை அடிப்படையில், அரங்குகளை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சதுரடிக்கு 169.65 ரூபாய் வாடகை வசூலிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கு தரை தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்ள 8633 சதுரடி பரப்பு அரங்குகள் தலா 50 ஆயிரம் ரூபாய் ஒரு நாள் வாடகை, அதேபோல், 2,742 சதுரடி அரங்குகள் 16 ஆயிரம், 2,848 சதுரடி அரங்கு, 17 ஆயிரம் ரூபாய், 1,278 சதுரடி அரங்க, 8 ஆயிரம் ரூபாய் என தினசரி வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த வளாகத்துக்கான ஏலம் முடிவுக்கு வரும் வரை இதனடிப்படையில் டவுன்ஹால் மாநாட்டு வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை