மேலும் செய்திகள்
7 கிலோ கஞ்சா பறிமுதல்; வட மாநிலத்தவர் கைது
09-Jun-2025
பல்லடம்; பல்லடம், வடுகபாளையத்தில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், நேற்று மாலை, பத்து வயதான புள்ளி மான் ஒன்று வந்தது.நாய்கள் துரத்தியதாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்ததாலும், அச்சமடைந்த புள்ளி மான், அங்கும் இங்குமாக அலைமோதியபடி, புதிதாக கட்டப்பட்டு வந்த குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்தது. குடியிருப்பு பகுதியில் மான் வந்த தகவல் பரவியதை தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் மானை பார்த்து கூச்சலிட்டனர். அச்சமடைந்த மான், கட்டடத்தில் இருந்த ஒரு அறைக்குள் பதுங்கியது.வனத்துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனவர் சதீஷ்குமார், மானை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தார்.
09-Jun-2025