உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ - நாம் வர்த்தகத்தில் பண பட்டுவாடா தாமதம்

இ - நாம் வர்த்தகத்தில் பண பட்டுவாடா தாமதம்

திருப்பூர்:மத்திய அரசு, 'இ - நாம்' எனப்படும் எலக்ட்ரானிக் ஏல முறையை அறிமுகப்படுத்தியது. இதில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலை ரகசியமாக இருக்கும்; அதிக விலை கோரும் வியாபாரிகளுக்கே விளை பொருட்கள் விற்கப்படும். இந்த வெளிப்படை தன்மையால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. இது குறித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த நிலக்கடலை விவசாயி சக்திவேல் கூறுகையில், ''இ - நாம் ஏல முறையில் விளை பொருட்ளுக்கான விலை நிர்ணயத்தில் வெளிப்படை தன்மை இருக்கிறது. அதே நேரம், அதிகளவு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றால் போட்டி அதிகரித்து, விலை மேலும் உயர வாய்ப்பு ஏற்படும். ''விற்கப்படும் விளை பொருட்களுக்குரிய தொகை, விவசாயி களின் வங்கிக்கணக்கிற்கு வந்து சேர, ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இதுபோன்ற குறைகள் தவிர்க்கப்பட வேண்டும்,'' என்றார். வேளாண் விற்பனை கூட அலுவலர்கள் கூறுகையில், 'இ - நாம் முறையில் விளை பொருட்களுக்கு வியாபாரிகள் வழங்கும் தொகை, அந்தந்த வேளாண் விற்பனை கூடங்கள் வாயிலாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 'இதனால், அதிகபட்சம், 24 மணி நேரத்துக்குள், விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டு விடும். 'தற்போது விவசாயிகளின் விளை பொருளுக்கு வியாபாரிகள் வழங்கும் தொகை, 'இ - நாம் போர்ட்டல்' வாயிலாக செலுத்தப்பட்டு, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது தான் தாமதத்திற்கு காரணம். பணம் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தினால், காலதாமதம் தவிர்க்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை