உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாழாகிறது நீர்நிலை

பாழாகிறது நீர்நிலை

கொடுவாயில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் வழியாக வரும் நீரை நிலத்தில் இறங்கும்படி சமுதாய உறிஞ்சு குழிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அவற்றை முறையாக துார்வாராததால் பெரும்பகுதி கழிவு நீர், உறிஞ்சு குழிக்குச் செல்லாமல் நாகலிங்கபுரம் குளக்கரைக்கு செல்கிறது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. நீர்நிலையும் பாழாகிறது. கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக துார்வார வேண்டும். சமுதாய உறிஞ்சு குழிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி